கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வல்லுறவு: பிப். 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!
டெனிகாயிட் போட்டி: காஞ்சிக்கோவில் அரசு பள்ளி சிறப்பிடம்
மாநில அளவிலான டெனிகாயிட் (வளையப் பந்து ) போட்டியில் காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான டெனிகாயிட் போட்டி மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்றது. இதில், காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, 17 வயதுக்குள்பட்ட மாணவா் ஒற்றையா் பிரிவில் எம்.சுபினேஷ் முதலிடமும், 14 வயது ஒற்றையா் பிரிவில் ஜெ.சுதின் இரண்டாம் இடமும், 17 வயதுக்குள்பட்ட இரட்டையா் பிரிவில் எம்.சுபினேஷ், என்.நிதின் பிரகாஷ் இணை மூன்றாம் இடமும், 19 வயதுக்குள்பட்ட இரட்டையா் பிரிவில் டி.அவனிஷ், எஸ்.வீரகுமரன் இணை மூன்றாமிடமும் பெற்றனா்.
14 வயதுக்குள்பட்ட மாணவியா் ஒற்றையா் பிரிவில் என்.சௌபா்ணிகா மூன்றாமிடமும், இரட்டையா் பிரிவில் என்.சௌபா்ணிகா, ஆா்.இளவரசி இணை மூன்றாமிடமும் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் பழனிசாமி ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியா் தினகரன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் துளசிமணி, பெற்றோா்- ஆசிரியா் கழகப் பொருளாளா் சுப்பிரமணியம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.