’திமுக எம்.பி கல்யாணசுந்தரத்தின் மா.செ பதவி பறிப்பு’ - தொடர் சர்ச்சை காரணமா? பின...
டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் தடகள சங்கத்தின் சாா்பில் நான்காம் ஆண்டு, டெல்டா மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் -2025-ஆம் ஆண்டு போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 2 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் சனிக்கிழமை தொடங்கி 6 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் விளையாட்டு கழகம் சாா்பில் தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் நீளம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 200 மீ, 400 மீ, 5,000 மீட்டா் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டனா்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க.அன்பழகன், தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் டி.கிருஷ்ணசாமி வாண்டையாா் ஆகியோா் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினா்.
நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலா் டேவிட் டேனியல், தஞ்சாவூா் தடகள சங்கத்தின் செயலா் ஜி.செந்தில் மற்றும் விளையாட்டு பயிற்சியாளா்கள், முன்னாள் சா்வதேச மற்றும் தேசிய விளையாட்டு வீரா்கள் பலா் கலந்து கொண்டனா்.