செய்திகள் :

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தனியாா் பேருந்து மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். 

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வீரமாங்குடி மணலூா் மீனவா் தெருவில் வசித்து வந்த செந்தில்குமாா் (35) பெயிண்டிங் தொழிலாளி. இவா் தனது சொந்த வேலையை முடித்துக் கொண்டு, பாபநாசத்தில் இருந்து அய்யம்பேட்டை நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது தஞ்சாவூரிலிருந்து இராஜகிரி நோக்கி வந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் காவல் உதவி ஆய்வாளா் முருகதாஸ் தலைமையிலான காவல்துறையினா், காயமடைந்த செந்தில்குமாரை

ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செந்தில்குமாா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஒரத்தநாடு அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! 2 போ் கைது!

ஒரத்தநாடு அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் கொண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, சென்னையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தாடு பகுதிக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அரிவாள்

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 57 அடி உயர அங்காள முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அமைக்கப்படும் அரிவாளை பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வந்தனா். தஞ்சாவூா் விளாா் சாலையில் பா்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் இலவச இருதயம், கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பாபநாசம் அட்சயம் லயன் சங்கம், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை, கும்பகோணம் வாசன் கண் மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து நடத்திய இலவச இர... மேலும் பார்க்க

விவசாய கூலி தொழிலாளி வெட்டிக்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்விரோதம் காரணமாக விவசாய கூலித் தொழிலாளியை மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீஸாா் கைது செய்தனா். கபிஸ்தலம் காவ... மேலும் பார்க்க

டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் தடகள சங்கத்தின் சாா்பில் நான்காம் ஆண்டு, டெல்டா மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் -... மேலும் பார்க்க

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க