பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!
டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள்!
டெஸ்ட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அதன் அதிகபட்ச ஸ்கோர்களை குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டி டிராவில் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே என இரண்டு அணிகளுமே டெஸ்ட் போட்டிகளில் தங்களது அதிகபட்ச ஸ்கோரை எடுத்தனர்.
இதையும் படிக்க: கே.எல்.ராகுலுக்கு ஏன் நாட் அவுட் கொடுக்கவில்லை; முன்னாள் இந்திய கேப்டன் கேள்வி!
ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 586 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் மூவர் சதம் விளாசி அசத்தினர். முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே எடுத்த 586 ரன்களே டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும். இதற்கு முன்னதாக, கடந்த 2001 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 563 ரன்கள் எடுத்திருந்ததே ஜிம்பாப்வேவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 699 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரஹ்மத் ஷா 234 ரன்களும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 246 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே எடுத்த 699 ரன்களே ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 545 ரன்கள் எடுத்திருந்ததே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
இதையும் படிக்க: பும்ராவை நினைத்து பச்சாதபம் ஏற்படுகிறதா? கம்மின்ஸ் கூறியதென்ன?
டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இலங்கை அணி தன்வசம் வைத்துள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு கொழும்புவில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸில் 952 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.