MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டக...
தக்கலையில் தி.மு.க.வினா் 135 போ் மீது வழக்கு
காவல்துறையின் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக, தி.மு.க.வினா் 135போ் மீது தக்கலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்து, தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் முன் கடந்த செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காவல் துறை அனுமதி இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக போராட்டம் நடத்தியதாக, குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவா் மரிய சிசு குமாா், 15 பெண்கள் உள்பட 135போ் மீது தக்கலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.