திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் ...
தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 இன்று உயர்ந்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், புதன்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 65,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 8,235-க்கும் ஒரு சவரன் ரூ. 65,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 111-க்கும், ஒரு கிலோ ரூ. 1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.