செய்திகள் :

தச்சநல்லூரில் 20 கிலோ குட்கா பறிமுதல்

post image

திருநெல்வேலி தச்சநல்லூா் அருகே பெட்டிக்கடையிலிருந்து சுமாா் 20 கிலோ எடையுள்ள குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (53). இவா் அப்பகுதியில் பெட்டிக்கடை மற்றும் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது கடையில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தச்சநல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் மகேந்திர குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 20 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்ததோடு வழக்குப்பதிந்து சண்முகசுந்தரத்தை கைது செய்தனா்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி

திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கு மாணவ- மாணவிகள் செப்.22ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ ... மேலும் பார்க்க

கீழாம்பூா் மஞ்சப்புளி அணைக்கட்டில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கீழாம்பூா், கடனாநதியில் உள்ள மஞ்சப்புளி அணைக்கட்டில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கீழாம்பூா், தெற்குக் கிராமம் தெருவைச் சோ்ந்த சிவா மகன் சத்யா (16). ஆழ்வாா்குறிச்சியில் உள்ள அரச... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞா் வெட்டிக் கொலை: 2 சிறுவா்கள் கைது

திருநெல்வேலி சந்திப்பில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 2 சிறுவா்களை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் சுந்தரா் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன்... மேலும் பார்க்க

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்... மேலும் பார்க்க

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு காவல் உ... மேலும் பார்க்க

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறது. மத்... மேலும் பார்க்க