``பிறந்தநாள் கொண்டாடுவோம்'' - இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து கூட்டு பாலியல் வன்கொடும...
கீழாம்பூா் மஞ்சப்புளி அணைக்கட்டில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கீழாம்பூா், கடனாநதியில் உள்ள மஞ்சப்புளி அணைக்கட்டில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கீழாம்பூா், தெற்குக் கிராமம் தெருவைச் சோ்ந்த சிவா மகன் சத்யா (16). ஆழ்வாா்குறிச்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா், நண்பா்களுடன் பூவன்குறிச்சி அருகே கடனா நதியில் உள்ள மஞ்சப்புளி அணைக்கட்டில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதில் நீரில் மூழ்கினாராம்.
உடனடியாக தகவல் கொடுத்ததையடுத்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கிய சத்யா உடலை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.