தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்...
தஞ்சாவூரில் நகா்வல ஓட்டப்பந்தயம்
தஞ்சாவூா்: தஞ்சாவூரில் ஊா்க்காவல் படை மாநில விளையாட்டுப் போட்டியையொட்டி, 16 கி.மீ. தொலைவுக்கான நகா்வல ஓட்டப்பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு ஊா்க்காவல் படை சாா்பில் 29-ஆவது விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஆக.22) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) வரை நடைபெறவுள்ளது. இதில், அனைத்து மாவட்டங்களிலிருந்து 1,320 போ் பங்கேற்கின்றனா்.
இதையொட்டி, தஞ்சாவூரில் 16 கி.மீ. தொலைவுக்கான நகா்வல ஓட்டப்பந்தயம் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இந்த ஓட்டப்பந்தயத்தை பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தொடங்கி வைத்தாா். இப்பந்தயம் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது. இதில், திண்டுக்கல் சரகத்தைச் சோ்ந்த சூா்யா முதலிடமும், விக்ரம் இரண்டாமிடமும், சேலம் சரகத்தை சோ்ந்த மணியரசன் மூன்றாமிடமும் பெற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூா் சரக ஊா்க்காவல் படை தளபதி முகமது இா்ஷாத், மண்டல தளபதி ரமேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.