செய்திகள் :

தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் அறையின் பூட்டு உடைப்பு... துணை வேந்தர்- பதிவாளர் மோதல்!

post image

40 பேர் நியமனம்..

தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்தவர் திருவள்ளுவன். இவர் ஓய்வு பெற இருந்த சூழலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாஸ்கரன் என்பவர் துணை வேந்தராக இருந்த போது 2017-2018ம் ஆண்டு​களில் துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்​களுக்கு 40 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இதில் தகுதி இல்லாத பலருக்கு முறைகேடாக பணி வழங்கபட்டதாக பாஸ்கரன் மீது சர்ச்சை எழுந்தது.

பதிவாளர் அறையில் போலீஸ் பாதுகாப்பி

இது தொடர்பான பொது நல வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு துணை வேந்தராக திரு​வள்ளுவன் பொறுப்பேற்றார். இவரிடம் துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் அந்த 40 பேரையும் தகுதி கான் பருவம் அடிப்​படையில் நிரந்தர பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக கூறப்படுகிறது.

துணை வேந்தர் (பொறுப்பு) நியமனம்

இவற்றிற்கு ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், திருவள்​ளுவன் ஆளுநருக்கு முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்கிறார்கள். இதனால் அதிருப்தியடைந்த ஆளுநர் கடந்த அக்டோபர் 20ம் தேதி திருவள்ளுவனை சஸ்பெண்ட் செய்து உத்தர்விட்டார். அத்துடன் ஓய்வு​பெற்ற நீதிபதி ஜெயச்​சந்​திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இதில் அப்செட் ஆன திருவள்ளுவன் அப்போதே பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி விட்டார்.

துணைவேந்தர் சங்கர்

இதையடுத்து, தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கர் துணை வேந்தவராக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டார். சங்கர் பொறுப்பேற்றதும் அவர் மீதும் பல சர்ச்சைகள் எழுந்தன. இதனால் பலகலைக்கழகத்தின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு தனி ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில், நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தில் நிலவும் குறைகள் குறித்து பலரும் பேசினர்.

துணை வேந்தர்- பதிவாளர் மோதல்!

இந்த நிலையில் தான் கடந்த 27ம் தேதி துணை வேந்தர் சங்கரை பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதுடன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதியை துணை வேந்தராக (பொ) நியமிப்பதாக பதிவாளர் தியாகராஜன் ஆணை பிறபித்தார். இதற்கிடையே பொறுப்பு பதிவாளரான தியாகராஜனை அந்த பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதுடன் அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் வெற்றிச்செல்வனை பதிவாளராக நியமனம் செய்வதாக சங்கர் ஆணை பிறபித்தார்.

பதிவாளர் தியாகராஜன்

பதிவாளர் அறையின் பூட்டு உடைப்பு...

இதையடுத்து இருவரது ஆணையும் ரத்து செய்யப்படுவதாகவும், விரைவில் சிண்டிகேட் குழுவை கூட்டி முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அரசு செயலர் தரப்பில் உத்தரவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே பதிவாளர் அறையில் முக்கிய கோப்புகள் உள்ளதால் இருவரும் பதிவாளர் அறைக்கு செல்ல வேண்டாம் என முன்கூட்டியே அரசு செயலர் தரப்பில் சொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த பதிவாளர் தியாகராஜன், பதிவாளர் அறைக்கு செல்லாமல் அருகில் உள்ள அறைக்கு சென்று தன் பணியை கவனித்தார்.

இந்த நிலையில் பதிவாளராக பொறுப்பேற்று தன் பணியை கவனிக்க வந்தார் வெற்றிச்செல்வன். பதிவாளர் அறை பூட்டப்பட்டிருந்தால் போலீஸ் பாதுகாப்புடன், இன்ஜீனியர் பிரிவில் உள்ள ஆள்கள் மூலம் பூட்டை உடைத்து பதிவாளர் அறைக்குள் சென்று தன் பணிகளை மேற்கொண்டார். இதையடுத்து சங்கரும், தியாகராஜனும் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லி மீடியாவிடம் பேட்டி அளித்தனர். இதனால் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Smoking: ஒரு சிகரெட் உங்கள் வாழ்நாளில் 20 நிமிடங்களை குறைக்கிறது - புதிய ஆய்வில் பகீர் தகவல்!

புகைப்பிடிப்பது உலகம் முழுவதும் பரவி காணப்படும் தீய பழக்கமாகும். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி நடத்திய ஆய்வொன்றில் 20 சிகரெட்டுகள் ஒரு நபரின் வாழ்நாளில் 7 மணிநேரத்தைக் குறைத்துவிடும் எனக் கண்டறியப்பட்டுள... மேலும் பார்க்க

ED: ``தமிழ்நாட்டில் Tent போட்டு தங்கிடுறாங்க'' -அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி சொல்வதென்ன?

அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி பேசியிருக்கிறார்.நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கரூர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜோதிமணி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதி... மேலும் பார்க்க

``மேலிட சார் உத்தரவால், எங்களை கைது செய்து ஆட்டு மந்தையில் அடைத்துள்ளனர்..'' - குஷ்பு டென்ஷன்!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு பேரணி தொடங்கிய நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.மண்டபத்துக்குள... மேலும் பார்க்க

Donald Trump: ``டிரம்ப் குற்றவாளி; ஜன.10-ல் தண்டனை வழங்கப்படும்" -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

வரும் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார் டிரம்ப். இந்த நிலையில், அவர் மீது இருந்த வழக்கு ஒன்று முக்கிய முடிவிற்கு வந்துள்ளது. 2016-ம் ஆண்டு, டிரம்ப் அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்பீக்கர் சத்தத்தில் அடைத்துக்கொண்ட காது... பிரச்னையாகுமா, தடுக்க முடியுமா?

Doctor Vikatan:கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு கோயிலில் விசேஷம். சாலையோரத்தில் மிகப்பெரிய ஸ்பீக்கர் வைத்து பக்திப் பாடலை ஒலிக்கவிட்டிருந்தனர். ஒரு நொடி அந்த ஸ்பீக்கர் இருக்கும் இடத்தைக் கடந்தேன். ச... மேலும் பார்க்க