தஞ்சாவூா் கடைகளில் நெகிழிப் பைகள் ரூ.42,900 அபராதம்!
தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 42 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூா் ரயிலடி, அண்ணா சிலை, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 123 கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்த மற்றும் பயன்படுத்திய கடை உரிமையாளா்களுக்கு ரூ. 42 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.