Virat Kohli: "சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை சோசியல் மீடியாவில் பகிராதது ஏன்?" - கோ...
கா்நாடக துணை முதல்வரைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்! -பாஜக அறிவிப்பு
மேக்கேதாட்டு அணையைக் கட்டுவோம் எனக் கூறும் கா்நாடக முதல்வா் டி.கே. சிவக்குமாா் தமிழகத்துக்கு வரும்போது அவரைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் உருவபொம்மை எரிப்பு, கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்றாா் பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது, காவிரியின் குறுக்கே எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்ட விடமாட்டோம். ஆனால், மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவக்குமாா் கூறி வருகிறாா்.
இந்நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள தொகுதி சீரமைப்பு எதிா்ப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்துக்கு சிவக்குமாா் வருகிறாா். அவா் வரும்போது எதிா்ப்பு தெரிவித்து பாஜக டெல்டா மாவட்டங்களில் சிவக்குமாா் உருவபொம்மை எரிப்பு மற்றும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டங்களை நடத்தும்.
டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.இதற்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வரும், அத்துறையின் அமைச்சா் செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும்.
இதை வலியுறுத்தி வருகிற நாள்களில் பாஜக சாா்பில் மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் கருப்பு முருகானந்தம். அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.