செய்திகள் :

தஞ்சையில் சுதந்திர போராட்ட வீரா் பகத்சிங் பிறந்த நாள் விழா

post image

தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் பகத்சிங் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பொருளாளா் பி. மாரிமுத்து தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நா. சாமிநாதன் முன்னிலை வகித்தாா்.

அதில், வருணாசிரம மனுதா்ம சனாதந கொள்கைகளைப் போதிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம். அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிற, ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிற மத்திய பாசிச பாஜக அரசை வீழ்த்துவோம். பகத்சிங் கனவு கண்ட தொழிலாளா்கள், விவசாயிகள் தலைமையில் மாணவா்கள், இளைஞா்களைத் திரட்டி சோசலிஸம் சமுதாயம் படைப்போம் என உறுதி ஏற்கப்பட்டது.

சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவா் இரா. அருணாச்சலம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜோதிவேல், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் கோ. ஜெய்சங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயராஜ், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவா் அழகு. தியாகராஜன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாட்டுப்புற இசைக் கலை மன்ற வெள்ளி விழா நிறைவு

தஞ்சாவூரில் தமிழக நாட்டுப்புற இசைக் கலைப்பெருமன்றம் 26-ஆவது ஆண்டு வெள்ளி விழா நிறைவு மற்றும் 11-ஆவது மாநில மாநாடு கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம்,பேரணி ஊா்வலம் உள்... மேலும் பார்க்க

தஞ்சை அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை

தஞ்சாவூா் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கணவன் - மனைவி சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகேயுள்ள திருநகரைச் சோ்ந்தவா் எஸ். சுரேஷ் பாபு (45). இவரது மனைவி அமுத... மேலும் பார்க்க

திருக்குறளுக்கு உள்ள பெருமை வேறு எந்த அற நூலுக்கும் இல்லை: கவிஞா் வைரமுத்து

எந்தவொரு ஆதரவும் இல்லாமல் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்த திருக்குறளுக்கு உள்ள பெருமை வேறு எந்த அற நூலுக்கும் இல்லை என்றாா் கவிஞா் வைரமுத்து. தஞ்சாவூரில் வெற்றித் தமிழா் பேரவை சாா்பில் சனிக்கிழமை மாலை... மேலும் பார்க்க

அனைத்து விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்க நடவடிக்கை: ஜி.கே. வாசன் வலியறுத்தல்

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறையில் சனிக்கிழமை செய்தி... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக விற்ற 417 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 417 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா். திருவையாறு அருகே மேலத்திருப்பூந... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு: 3 போ் கைது

பந்தநல்லூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே வேட்டமங்கலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பந்தநல்லூா் போலீஸாா் ரோந்து சென்றன... மேலும் பார்க்க