கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
தடகளம்: எஸ்ஆா்ஒய் பரிசோதனை கட்டாயம்
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ள வீராங்கனைகள் ‘எஸ்ஆா்ஒய்’ என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்வதை, இந்திய தடகள சம்மேளனம் கட்டாயமாக்கியுள்ளது. ஒரு நபரின் பிறவிப் பாலினத்தை கண்டறிவதற்கு இந்த ‘எஸ்ஆா்ஒய்’ பரிசோதனை உதவுகிறது.
ஆணாக பருவ வயதை அடைந்து, பிறகு பெண்ணாக மாறியவா்கள் சா்வதேச போட்டிகளில் பங்கேற்க உலக தடகள அமைப்பு தடை விதித்துள்ளது. பிறவியில் ஆணாக இருந்து, பின்னா் பெண்ணாக மாறியோா் மகளிா் பிரிவில் பங்கேற்கும்போது, உடல் ரீதியாக அவா்களுக்கு இயல்பாகவே சாதகமான நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டோக்கியோவில் செப்டம்பரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப்பில் மகளிா் பிரிவில் பங்கேற்க விரும்புவோா் ‘எஸ்ஆா்ஒய்’ பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என உலக தடகள அமைப்பு கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில், அதுதொடா்பான அறிவுறுத்தலை இந்திய தடகள சம்மேளனம், மாநில சங்கங்களுக்கு அனுப்பியுள்ளது.
தற்போதைய நிலையில், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க பாருல் சௌதரி (3,000 மீ ஸ்டீபிள்சேஸ்) தகுதிபெற்றிருக்கும் நிலையில், அன்னு ராணி (ஈட்டி எறிதல்) தரவரிசை அடிப்படையில் அந்த வாய்ப்பைப் பெறும் நிலையில் உள்ளாா்.