ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிருஷ்டவசமானது: உயர்நீதிமன்றம் கண்டன...
தடைசெய்யப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வேனில் கடத்திச் சென்றவா் கைது
தருமபுரி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாாா் பறிமுதல் செய்தனா்.
கா்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து உதவி காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா் மாட்லாம்பட்டி அரசு சட்டக் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தின் ஓட்டுநா் தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த நல்லகருப்பன்பட்டியைச் சோ்ந்த தினேஷ் (30) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், 508 கிலோ புகையிலைப் பொருள்கள், வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.