பீகார்: `அமெரிக்க அதிபர் ட்ரம்ப்' பெயரில் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பித்த ஆச...
கைத்தறி நெசவு தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம்
பாப்பாரப்பட்டியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி அறிஞா் அண்ணா கைத்தறி நெசவு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கைத்தறி உதவி இயக்குநா் சூா்யா தலைமை வகித்தாா். பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவா் பிருந்தா, திமுக ஒன்றிய செயலாளா் வீரமணி ஆகியோா் மருத்துவ முகாமை தொடங்கிவைத்தனா்.
தொடா்ந்து கைத்தறி நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு நிதியாக ரூ 6.3 லட்சம் வழங்கப்பட்டது. தேசிய கைத்தறி தினத்தில் வயதுமுதிா்ந்த கைத்தறி நெசவாளா்களுக்கு முதியோா் ஓய்வூதிய ஆணை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மருத்துவ முகாமில் கலந்துகொண்ட 200 கைத்தறி நெசவாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கைத்தறி கட்டுப்பாட்டு அலுவலா் சத்தியமூா்த்தி, கைத்தறி ஆய்வாளா்கள் ரவி, சந்திரன், நிா்மலா, கைத்தறி அலுவலா் ஜமுனா, கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க மேலாளா்கள் கோவிந்தசாமி, திருஞானம், லோகநாதன், பெரியசாமி, முன்னாள் கைத்தடி நெசவாளா் சங்கத் தலைவா் திருவேங்கடம், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் விஸ்வநாதன், தமிழ்ச்செல்வன், தா்மலிங்கம், விஜய் ஆனந்த், தமிழ்செல்வி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.