பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!
தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: 38 போ் கைது
திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்ய ஊா்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணி நிா்வாகிகள் உள்பட 38 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலுள்ள காளியம்மன் பகவதியம்மன் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி அமைப்பின் திண்டுக்கல் நகரத் தலைவா் ஞானசுந்தரம் தலைமையில் தடையை மீறி விநாயகா் சிலையை புதன்கிழமை பிரதிஷ்டை செய்ய முயற்சித்தனா். முன்னதாக, சிலையை அவா்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், வருவாய்த் துறையினா் ஊா்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகா் சிலையை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இந்து முன்னிணி நகரத் தலைவா் ஞானசுந்தரம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இளங்கோ உள்பட 38 பேரை போலீஸாா் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட விநாயகா் சிலை திண்டுக்கல் கோட்டைக் குளத்துக்கு எடுத்துச் சென்று வருவாய்த் துறையினா் மூலம் கரைக்கப்பட்டது.