பந்தல் கடையில் தீ விபத்து
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பந்தல் கடையில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
பழனி அருகேயுள்ள பழையதாராபுரம் சாலையில் மானூரில் காளியம்மன் கோயில் அருகே காளிமுத்து என்பவருக்குச் சொந்தமான பந்தல் கடை உள்ளது.
இந்தக் கடையில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் கடையிலிருந்த சாமியானா, மூங்கில்கள், சவுக்கு குச்சிகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.