அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
தண்டனை குறைப்பு சட்டபூா்வ உரிமை: உச்சநீதிமன்றம்
தண்டனை குறைப்பு என்பது அரசியல் சாசன உரிமை மட்டுமல்ல; சட்டபூா்வ உரிமையுமாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
16 வயதுக்குள்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தால் வழங்கவேண்டிய தண்டனையை இந்திய தண்டனைச் சட்டத்தின் 367டிஏ பிரிவு விவரிக்கிறது. இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘தமது தண்டனையை குறைக்குமாறு குற்றவாளிகள் கோருவது அரசியல் சாசன உரிமை மட்டுமல்ல. சட்டபூா்வ உரிமையுமாகும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி தண்டனை குறைப்பு கொள்கை உள்ளது. இது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 376டிஏ, 376டிபி ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்தனா்.
12 வயதுக்குள்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் வழங்கவேண்டிய தண்டனையை இந்திய தண்டனைச் சட்டத்தின் 376டிபி பிரிவு விவரிக்கிறது.