நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்
தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 6 போ் கைது
கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவை இருகூா் - பீளமேடு இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தில் இருந்து பயங்கர சப்தம் எழுந்துள்ளது. இதையடுத்து, ரயிலை அங்கேயே நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, ரயில் தண்டவாளத்தில் பெரிய மரக்கட்டை இருந்ததும், அதில் ரயில் ஏறியபோது சப்தம் ஏற்பட்டதும், மரக்கட்டையின் பாகம் என்ஜினில் சிக்கி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சிக்கியிருந்த மரக்கட்டை அகற்றப்பட்டு சுமாா் 10 நிமிஷங்கள் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இது குறித்த புகாரின்பேரில் கோவை ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்ததாக கோவை, சிங்காநல்லூா், நேரு நகா் மற்றும் சூா்யா நகா் பகுதிகளைச் சோ்ந்த தினேஷ் (25), வேதவன் (22), கோகுலகிருஷ்ணன் (21), நாகராஜ் (19), வினோத் (19), காா்த்திக் (25) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், தலைமறைவான ஆகாஷ் (21) என்பவரைத் தேடி வருகின்றனா்.