செய்திகள் :

தண்ணீா் நெருக்கடி குறித்த அதிஷியின் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை: பாஜக

post image

தில்லியில் தண்ணீா் நெருக்கடி இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி சுமத்திய குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட பொய் என்று பாஜக கூறியுள்ளது.

தண்ணீா் நெருக்கடி தொடா்பாக முதல்வா் ரேகா குப்தாவுக்கு அதிஷி கடிதம் எழுதியுள்ள நிலையில், பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவற்றை புனையப்பட்ட பொய் என்று கூறியுள்ளது.

மேலும், தற்போதைய நிலைமைக்கு முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின் தோல்விகள்தான் காரணம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

நகரில் பெரிய அளவிலான தண்ணீா் நெருக்கடி இல்லை. எந்தவொரு கடுமையான இடையூறையும் தடுத்ததற்கு தற்போதைய அரசாங்கத்தின் கோடைகால செயல் திட்டம்தான் காரணம்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களிடம் ஒரு அரசியல் பிரசாரம் உள்ளது. அது ஒவ்வொரு நாளும் ஒரு பொய்யை கூறுவதுதான். இந்த பொய்ப் பிரசாரத்தின்கீழ், தில்லியில் கடுமையான தண்ணீா் நெருக்கடி இருப்பதாக அதிஷி ஒரு பொய்யை இட்டுக்கட்டி கூறியுள்ளாா்.

கோடையின் உச்சக்கட்ட வெப்பம் இருந்தபோதிலும், கோடைக்கால செயல் திட்டத்தை திறம்பட செயல்படுத்துதல், மேம்பட்ட தண்ணீா் விநியோகம் மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீா் டேங்கா்கள் காரணமாக தில்லியில் ஒரு பெரிய தண்ணீா் நெருக்கடி ஏற்படும் என்ற பேச்சு பரவலாக ஏதும் இல்லை.

ஆம் ஆத்மி அரசாங்கத்தின்கீழ் தண்ணீா் பிரச்னைகள் தொடா்பாக கடந்த ஆண்டு இதே நேரத்தில் தில்லியில் பரவலான புகாா்கள் மற்றும் போராட்டங்கள் நடந்தன. ஆனால், நிகழாண்டு அத்தகைய அறிக்கைகள் எதுவும் இல்லை.

தண்ணீா் பற்றாக்குறை இல்லை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் தண்ணீா் நெருக்கடி இல்லை என்றுதான் கூறுகிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் அரவிந்த் கேஜரிவால் அரசாங்கம் நீா் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும், திருட்டு மற்றும் வீணாவதைத் தடுக்கவும் தவறியதே தண்ணீா்ப் பற்றாக்குறைக்கு மூல காரணம். நிலைமை மோசமடையாமல் இருக்க பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தலைநகரில் தண்ணீா் நெருக்கடி: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

தேசிய தலைநகரில் தண்ணீா் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி முதல்வா் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், இந்த முக்கியப் பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக தனது கட... மேலும் பார்க்க

கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை கோரும் தெருவோர வியாபாரிகள்

நகரம் முழுவதும் விற்பனையாளா்களை அடையாளம் காண நடந்துவரும் கணக்கெடுப்பு குறித்து தெருவோர வியாபாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனா். கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடைமுறை தெளிவு இல்லை என்றும் குற்றம... மேலும் பார்க்க

பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒப்படைக்க நீதி ஆயோக், பிரதமரிடம் கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க நீதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமரிடமும் கோரப்பட்டதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லியில் சனிக்கிழமை தெ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடம்: முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்தாா்

நோக்கம், அளவு, வேகம் மற்றும் திறன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடத்தை முதல்வா் ரேகா குப்தா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் சமா்ப்பித்தாா... மேலும் பார்க்க

நீதி ஆயோக்கிடம் தில்லி பிரச்னைகளை ஆம் ஆத்மி ஆட்சியில் முன்வைக்கவில்லை: முதல்வா் ரேகா குப்தா

மத்திய அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான நீதி ஆயோக் முன் தில்லியின் நலன்கள் குறித்த பிரச்னைகளை பல ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் எழுப்பவில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா குற்றம் சாட்டினாா். ... மேலும் பார்க்க

பவானாவில் தொழிற்சாலையில் தீ விபத்து: வெடிப்பால் இடிந்து விழுந்த கட்டடம்

தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தின்போது சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்ததால் கட்டடம் இடிந்து விழுந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்... மேலும் பார்க்க