மாணவி பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல: அமைச்சர் விளக்கம்!
தந்தையோடு சென்ற சிறுமி விபத்தில் பலி
கரூா் மாவட்டம் வாங்கல் அருகே தந்தையோடு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்ற சிறுமி விபத்தில் உயிரிழந்தாா்.
கரூரை அடுத்த சோமூா் முத்தமிழ்புரத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன். இவா் 6 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் ரித்திக்காவை திங்கள்கிழமை இரவு தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு திருமுக்கூடலூா்-சோமூா் சாலையில் மொசக்கன்னி முடக்கு என்ற இடம் வழியே சென்றாா்.
அப்போது திடீரென ஆடுகள் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி பைக்கில் இருந்து இருவரும் தவறி விழுந்ததில் படுகாயமடைந்த ரித்திகா சம்பவ இடத்திலேயே இறந்தாா். காயமடைந்த கண்ணதாசன் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.