500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்
தனலட்சுமி வங்கியில் அலுவலர், மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
கேரளம் மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 97 ஆண்டுகால வங்கி பாரம்பரியம் கொண்ட வணிக வங்கியான தனலட்சுமி வங்கியில் காலியாக உள்ள இளநிலை அலுவலர்கள் மற்றும் மேலாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுய. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Officer
தகுதி : ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 31.3.2025 தேதியின்படி 21 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
தகுதி : ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வுகள் தொடர்பான அனைத்து விபரங்களும் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூரில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.
தேர்வு மையங்கள்: தில்லி, என்சிஆர், மும்பை, தாணே,நவி மும்பை, எம்எம்ஆர், அகமதாபாத், காந்திநகர், ஹைதராபாத், விஜயவாடா,குண்டூர், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.708. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dhanbank.com/careers என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.7.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
மாதம் ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் வங்கியில் வேலை வேண்டுமா..?
Dhanlaxmi Bank Ltd, a scheduled commercial bank with 97 years of banking tradition, headquartered at Thrissur, Kerala with ambitious growth plans invites applications for recruitment of Junior Officers and Assistant Managers.