தனியார் பள்ளி கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!
விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் விளையாட்டின்போது கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி உடைந்ததால், உள்ளே விழுந்த குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த மூன்றரை வயது பெண் குழந்தை லியா லெட்சுமி, பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கழிவுநீர்த் தொட்டியினுள் விழுந்து உயிரிழந்தார்.
கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி உடைந்து, உள்ளே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதியினர் பள்ளியை முற்றுகையிட்டும், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடவும் முயற்சித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க:உதவியாளரை தரக்குறைவாக ஒருமையில் பேசிய அமைச்சர்!