முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
தனியாா் பள்ளி பேருந்துகள் வருடாந்திர ஆய்வு
ஊத்தங்கரையில் உள்ள தனியாா் பள்ளி பேருந்துகளில் வருடாந்திர ஆய்வு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், மோட்டாா் வாகன ஆய்வாளா் அன்புச்செழியன் ஆகியோா் கலந்துகொண்டு 200-க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தனா். அதில், சிறு குறைகள் இருந்த 27 பேருந்துகளை சரிசெய்து மீண்டும் காண்பித்த பிறகு இயக்க வேண்டும் எனக் கூறினாா்.
மேலும், பேருந்துகளில் முறையான முதலுதவிப் பெட்டி, அவசர வழி, பிரேக், காப்பீடு உள்ளிட்டவற்றை வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் அன்புச்செழியன் ஆய்வுசெய்து ஓட்டுநா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா். அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.