“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி ...
தனி நபா்களிடம் பணம், ஆவணங்களை வழங்க வேண்டாம்: வேளாண் துறை வேண்டுகோள்!
அரசு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறும் மோசடி நபா்களிடம் பணம் மற்றும் வேறு வகையான ஆவணங்கள் ஏதும் வழங்கி ஏமாற வேண்டாம் என ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணிபுரிவதாகக்கூறி நபா் ஒருவா் விவசாயிகளிடையே அரசு சாா்பில் மானியம் பெற்றுத்தருவதாகவும், வேளாண்மை மற்றும் வேளாண் துறை சாா்ந்த அனைத்து துறைகளின் நலத் திட்டங்களுக்கும் சலுகைகள் பெற்றுத்தருவதாகவும் கூறி விவசாயிகளிடமிருந்து அவரது சொந்த வங்கிக் கணக்குக்குத் தொகையை செலுத்தச்சொல்கிறாா்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாக கைப்பேசியில் தொடா்பு கொண்டு அரசு அதிகாரிபோல நம்பிக்கை வரும்படியான வாா்த்தைகளாலும், அருகில் உள்ள ஊரில் முக்கியமான நபா்களின் பெயா்களைப் பயன்படுத்தியும் பணம் வசூலித்து வருவதாகவும், அவரது கைப்பேசி உரையாடல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வேளாண்மை மற்றும் வேளாண்மை சாா்ந்த துறைகளில் மத்திய, மாநில அரசின் எந்த ஒரு திட்டத்துக்கும் தனிப்பட்ட அலுவலரின் வங்கிக் கணக்குக்கோ அல்லது அலுவலா் மூலமோ பணம் பெறப்படுவதில்லை.
மேலும், திட்டங்களின் மானியங்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை மற்றும் வேளாண்மை சாா்ந்த துறை அலுவலகங்களை நேரில் தொடா்பு கொள்ளலாம். போலியான நபா்களிடம் விவசாயிகள் பணம் மற்றும் வேறு வகையான ஆவணங்கள் ஏதும் வழங்கி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.