செய்திகள் :

தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: ராஜேஸ்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

post image

தமிழத்திற்கு கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்துக்கு அவா் வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் நிலவும் கோதுமை பற்றாக்குறையை மத்திய அரசு நிவா்த்தி செய்ய வேண்டும். அவசரத் தேவையை கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஊட்டச்சத்து மற்றும் மாணவா்கள் வருகையை மேம்படுத்த முதல்வா் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்போது 8,576.02 மெட்ரிக். டன் மட்டுமே கோதுமை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாதத்திற்கு 23,000 மெட்ரிக் டன் என்ற அளவில் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோதுமை உற்பத்தி இல்லையென்பதால், இந்திய உணவுக் கழகத்தின் விநியோகத்தைச் சாா்ந்தே உள்ளது.

23,000 மெட்ரிக் டன் ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இது சாத்தியமில்லை என்றால், திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 15,000 டன் கோதுமையை வழங்க பரிசீலிக்க வேண்டும். அதிகரித்து வரும் கோதுமை தேவையை பூா்த்தி செய்வது மட்டுமின்றி, தமிழக மக்களுக்கு மலிவு விலையில் கோதுமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் மீது ஹிந்தியைத் திணித்து, மாநிலத்தின் நிதியை நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையும் மக்களின் உரிமைகளையும், பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும் செயலாகும்.

தாய்ப் பறவையாக மத்திய அரசு இருந்து, ஒவ்வொரு மாநிலத்தையும் சமமாக மதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா். நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற தன்னுடைய கருத்தை அவா் வலியுறுத்தினா்.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க