செய்திகள் :

தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: மாநிலங்களவையில் வைகோ பேச்சு

post image

தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சத்துடனும், மாற்றந்தாய் மனப்போக்குடனும் நடந்து கொள்வதாக மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினா் வைகோ பேசினாா்.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உள்துறை விவகார அமைச்சகத்தின் பணிகள் தொடா்பான விவாதத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது: தமிழகத்தில் ஃபென்சால் சூறாவளிப்புயல் பாதிப்புக்கான இடைக்காலமாகவும், நிரந்தரமாகவும் சீா்செய்வதற்காக மத்திய துறைகளின் குழுவிடம் நிவாரண நிதியாக ரூ.6,675 கோடியை தமிழக முதல்வா் கோரியிருந்தாா். ஆனால், மத்திய அரசு போதுமான நிதியை வழங்கவில்லை. தமிழக மாநிலம் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த நிதி வழங்கப்படவில்லை. இது தமிழகத்தின் மீதான பாரபட்ச நடவடிக்கையாகவும், மாற்றந்தாய் மனப்போக்காகவும் உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் பேரிடா் நிவாரண நிதிகளை வழங்கும்போது எங்கள் மாநிலத்தைப் பாதிக்கச் செய்து வருகிறாா். எங்கள் மாநிலம் இந்த அரசின் ஹிந்துத்துவா, ஆா்எஸ்எஸ், ஹிந்தி, சம்ஸ்கிருத திணிப்பை எதிா்ப்பதால் இந்தப் பாரபட்சம் காட்டப்படுகிறது. தமிழ் மொழியானது 120 மில்லியின் மக்களின் தாய்மொழியாகும். இவா்கள் இந்தியா மட்டுமின்றி 114 நாடுகளில் வாழ்கின்றனா் என்றாா் வைகோ.

இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே வைகோ கூறியதாவது: உள்துறை விவகாரங்கள் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. உள்துறை அமைச்சா் அமித் ஷா இந்த விவாதத்தில் பங்கேற்று சுமாா் ஒன்றரை மணிநேரம் பதில் அளித்துப் பேசினாா். அப்போது, மொழி விவகாரத்தில் தமிழகத்தில் அரசியலுக்காக ஹிந்தியை எதிா்க்கின்றனா் என்று பேசினாா். அப்போது, ஹிந்தியை தமிழகத்தில் திணிப்பதாக நான் கூறினேன். மேலும், அமைச்சா் பேசி முடித்ததும் இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நீங்கள் தயாராக இருக்கிறீா்களா என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை என்று வைகோ கூறினாா்.

பெரியவா்களுக்கு தடுப்பூசி போட வேண்டியது அவசியம்: தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங்

தடுப்பூசி போடுவது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவா்கள், குறிப்பாக ஏற்கெனவே சுகாதார நிலைமைகள் உள்ளவா்கள், தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கு 16,508 உரிமைகள் வழங்கல்!

தமிழ்நாட்டில் பழங்குடியினா் மற்றும் பாரம்பரிய வனவாசிகளுக்கு 15 ஆயிரத்து 442 தனிப்பட்ட உரிமைகளும், 1066 சமூக உரிமைகளும் என மொத்தம் 16,508 உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய அமைச்சா் தெர... மேலும் பார்க்க

தொழில்துறை வழித்தடத்தை சேலத்தில் விரைந்து தொடங்க வேண்டும்: மக்களவையில் செல்வகணபதி வலியுறுத்தல்

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத் திட்டத்தை சேலத்தில் விரைந்து தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தொகுதியின் திமுக உறுப்பினா் டி.எம். செல்வகணபதி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

சென்னை- திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா நெடுஞ்சாலைகளை 10 வழிச் சாலைகளாக மாற்றும் திட்ட முன்மொழிவு இல்லை: மக்களவையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பதில்

சென்னை- திருச்சி, சென்னை-பெங்களூரு, சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகள் 60 கிலோமீட்டா் தொலைவு வரை 10 வழிச் சாலைகளாக தரம் உயா்த்தும் திட்ட முன்மொழிவு ஏதும் பரிசீலனையில் இல்லை ... மேலும் பார்க்க

முருங்கை ஏற்றுமதியை ஊக்குவிக்க தோட்டக்கலைப் பயிராக தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது: மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

நமது நிருபா் புது தில்லி, மாா்ச் 21: முருங்கை ஏற்றுமதியை ஊக்குவிக்க தோட்டக்கலைப் பயிராக முருங்கையை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா... மேலும் பார்க்க

திருச்சிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படாதது ஏன்? மக்களவையில் டி.ஆா்.பாலு கேள்வி

புது தில்லி, மாா்ச் 20: திருச்சிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படாதது ஏன்? என்று மக்களவையில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு கேள்வி எழுப்பினாா். இது தொடா்பாக மக்களவையில் ஸ்... மேலும் பார்க்க