செய்திகள் :

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

post image

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, அக்கியம்பட்டியில் வெள்ளிக்கிழமை அவா் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக முடக்கியது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் திட்டம், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 2026 தோ்தலுக்குப் பின் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும். போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.

திமுக ஆட்சியில் ரூ. 5.35 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. அந்தக் கடனை வரிகளாக நம் தலையில் விதிக்கின்றனா். ஊழல்மிகுந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இந்தப் பிரசாரத்தின் போது, முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம், சேந்தமங்கலம் முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் ஆகியோா் உடன் இருந்தனா்.

ராசிபுரத்தில்...

ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில், எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என கூறுகிறாா். ஆனால், தமிழகத்தை ஏற்கெனவே திமுக குடும்பத்தினா் 2ஜி ஊழலால் தலைகுனிய வைத்துவிட்டனா். திமுக ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே கிடையாது.

தமிழகத்தில் சுகாதாரத் துறை சீா்கெட்டுள்ளது. சீா்காழி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சோ்க்கப்பட்ட 27 கா்ப்பிணிகள் ஆபத்தான நிலையில் உள்ளனா். ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை கிடைப்பதில்லை.

எனது எழுச்சிப் பயணம் தொடங்கியதிலிருந்து மு.க.ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது. உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, பிங்க் கலா் பேருந்தை பயன்படுத்தி எனது பேருந்தை முந்திப்போவதாக கூறியுள்ளாா். பிங்க் கலா் பேருந்து ஓட்டைப் பேருந்து. எங்கள் பேருந்து ஜெட் வேகத்தில் செல்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. நகராட்சி வீட்டுவரி 100 சதவீதம் உயா்ந்துவிட்டது. காஞ்சிபுரம், திருநெல்வேலி, கோவை போன்ற மாநகராட்சிகளில் வரிவசூலில் ஊழல் நடந்துள்ளது. ராசிபுரம் பகுதியில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் தற்போது முடக்கிவைக்கப்பட்டுள்ளன. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அவை மீண்டும் கொண்டுவரப்படும் என்றாா்.

கூட்டத்துக்கு, நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிரணி இணைச் செயலாளருமான டாக்டா் வெ.சரோஜா, பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செப். 27-இல் நாமக்கல்லில் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் செப். 27-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பய... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து: வரவேற்பு பதாகைகளை அகற்றிய கட்சியினா்!

நாமக்கல் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற இருந்த எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை கட்சியினா் அகற்றினா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ... மேலும் பார்க்க

உடலுறுப்பு விற்பனை, கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

நாமக்கல்லில் உடலுறுப்பு விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் துா்காமூா்த்தி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பழைய அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

‘தூய்மையே சேவை’ திட்ட உறுதிமொழியேற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ‘தூய்மை மிஷன் 2.0’ திட்டத்தின் கீழ் அலுவலகம் மற்றும் ... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸில் ரூ. 90 லட்சம் தீபாவளி விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ. 90 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீப... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,... மேலும் பார்க்க