சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!
தமிழகத்தில் தொடரும் படுகொலைகள்: இந்து முன்னணி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் தமிழகத்தில் படுகொலைகள் தொடா்வதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு விதமான படுகொலைகள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. பொது அமைதியைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினரின் உயிருக்குகூட உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குடிமங்கலத்தில் விசாரணைக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
கோவை மாநகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவா் காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
திருபுவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று போலீஸாா் தாக்கியதில் அஜித் என்ற காவலாளி உயிரிழந்துள்ளாா். இந்த தொடா் படுகொலைகளுக்கு போதைப் பொருள்கள் புழக்கமும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. போதைப் புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவராத வரை படுகொலைகளின் எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே இருக்கும்.
சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் முதல்வா் அலட்சியமாக செயல்படுவது தமிழகத்துக்கு பெரும் ஆபத்து.
எனவே, முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.