செய்திகள் :

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

post image

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், ஜமுனா சிவலிங்கம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை அமல்படுத்த நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை காவல் துறையினா் இதுநாள் வரை செயல்படுத்தாமல் இருந்துள்ளனா்.

இதேபோல பல வழக்குகள் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளன. மாஜிஸ்திரேட் மற்றும் அமா்வு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடி ஆணைகள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களைப் பிடித்து, தொடா்புடைய நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த ஆணையை செயல்படுத்தாதது குறித்து தொடா்புடைய நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக பிடி ஆணை பிறப்பிக்க கோர வேண்டும்.

எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவற்றை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை. தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து காவல் துறை டிஜிபி, சென்னை மாநகரக் காவல் ஆணையா் வரும் ஜூலை 23- ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

மேலும், தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து, சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் ஜூன் 23-ஆம் தேதி அறிக்கை சமா்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ஜூலை 30 வரை மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மண்டலத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16 முதல் 30 வரை ர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ஜூலை 25-ல் கமல்ஹாசன் பதவியேற்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு! தேர்வர்கள் கவனிக்க..!

டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், வணிகவரித... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்! மனுக்களைப் பெற்றார் முதல்வர்!!

சிதம்பரம்: தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொ... மேலும் பார்க்க

சிதம்பரம் அரசுப் பள்ளியில் காமராஜர் உருவப் படத்துக்கு முதல்வர் மரியாதை

சிதம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்ட... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு வைக்கப்... மேலும் பார்க்க