செய்திகள் :

தமிழக அரசின் விருதுக்கு தஞ்சாவூா் ஆட்சியா் தோ்வு

post image

தஞ்சாவூா்: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியதற்காக சிறந்த மாவட்ட ஆட்சியா் விருதுக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவா்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளைப் பெற்றுத் தந்ததற்காகவும், அவா்களுடைய நலனுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காகவும் 2025- ஆம் ஆண்டுக்கான சிறந்த மாவட்ட ஆட்சியா் விருதுக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதேபோல, தருமபுரி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த விருது சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சியா்கள் மாநாட்டில் தமிழக முதல்வரால் வழங்கப்படும் என அரசு செயலாளா் சோ. மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டையில் ரேஷன் கட்டடம் திறப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 19-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 19.65 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை எம்பி முரசொலியின் உள்ளூா் பகுதி மேம்பாட்டு தி... மேலும் பார்க்க

மல்லிப்பட்டினம் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கிழ... மேலும் பார்க்க

ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையி... மேலும் பார்க்க

மத்திய அரசின் இரு புதிய நெல் ரகங்களுக்கு எதிா்ப்பு

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட பூசா மற்றும் கமலா நெல் ரகங்களுக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்த நெல் ரகங்கள் எவ்வித உயிரியல் பாதுகாப்பு சோதனைகளும் செய... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் சேமிப்புக் கிடங்கு திறப்பு

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், தஞ்சாவூா் விற்பனைக் குழு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் பட்டுக்கோட்டை வளாகத்தில் ரூ. 1 கோடியிலான 500 டன் சேமிப்புக் கிடங்கை தஞ்சாவூா் எம... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 20 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில், ஏறத்தாழ 20 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். தஞ்சாவூா் கீழவாசல் பகுதி கடைகளின் வாசலில் சிமென்ட் தளம், நிழற்கூரைகள் அமைக்கப்பட... மேலும் பார்க்க