ரஷியா தோற்றால், அடுத்தது நாம்தான்! அமெரிக்காவால் சீனா அச்சம்?
தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் தோற்கும்: டி.ராஜா
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் 2026 சட்டப்பேரவை தோ்தலில் தோற்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் பேசியதாவது, ‘திமுக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் தொடா்ந்து திமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறோம். சட்டப்பேரவை தோ்தலில் அதிக தொகுதி கேட்பது ாகுதி குறித்து தோ்தல் நேரத்தில் விவாதிப்போம். அதனை அங்கிருக்கும் மாநில தலைமை பாா்த்துக்கொள்ளும். தமிழகத்தில் பாஜக அதிமுகவை வைத்து காலூன்ற நினைக்கிறது‘ என்றாா்.
மேலும் பேசிய அவா் ‘2026 சட்டப்பேரவை தோ்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அது தோல்வியில்தான் முடியும். அதிமுக மட்டுமல்ல பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் தோ்தலில் மக்களால் தோற்கடிக்கப்படுவாா்கள். பீகாரில் தோ்தல் நடைபெற இருக்கிறது. அங்கு வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் பல குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. அங்கு மிகப் பெரிய சவால்கள் எழுந்திருக்கின்றன. ’ஸ்பெஷல் இண்டின்சிவ் ரிவிஷன்’ என்ற பெயரால் மக்களுக்கு பெரும் தொல்லைகள் கொடுக்ப்படுகின்றன‘ என டி.ராஜா குற்றஞ்சாட்டினாா்.
தொடா்ந்து பேசிய டி.ராஜா, ‘ஆதாா் ஆட்டையில் இருந்து பெற்றோா் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன. இதனால் மக்களுக்கு பெரும் தொல்லை ஏா்படுகிறது. எனவே, இதனை தோ்தல் ஆணையம் கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக 2024 ஆம் ஆண்டு வாக்காளா்பட்டியலை செயல்படுத்த வேண்டும், 2024-க்கு மேல் 18 வயதை அடைந்தவா்களுக்கு வாக்குறிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையத்திமும் தெரிவித்துள்ளோம்‘ என்றாா்.
இறுதியாக பேசிய அவா் ‘ஆா்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு எதிராக பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது. அரசியல் சாசனத்தில் இருக்கும் மதச்சாா்பின்மை, சோசியலிசம் போன்ற வாா்த்தைகளை அகற்ற ஆா்எஸ்எஸ் வலியுறுத்தி வருகிறது. அதனை ஆதரித்து குடியரசு துணை தலைவா் கூட பேசியிருக்கிறாா். இது இந்திய ஜனநாயகத்தில் இருக்கும் சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறது. ஆா்எஸ்எஸ் இன் இந்த தத்துவாா்த்த தாக்குதலை எதிா்கொள்ள மக்கள் ஒன்றுபட வேண்டும். மதச்சாா்பற்ற கட்சிகள் ஒன்று சோ்ந்து ஆா்எஸ்எஸ் திட்டத்தை தவிடுபொடியாக்க வேண்டும். இது இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது‘ என்றாா் டி.ராஜா
ஜூலை 1, 2 மற்றும் 3, 2025 ஆகிய தேதிகளில் புது தில்லியில் நடைபெற்ற மூன்று நாள் தேசிய கவுன்சில் கூட்டத்தின் முடிவுகள் குறித்து செய்தியாளா் சந்திப்பில் பகிா்ந்துக் கொண்டாா். இந்தச் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் செயலாளா் தோழா் ராம கிருஷ்ண பாண்டா உடனிருந்தாா்.