செய்திகள் :

தமிழக பாஜகவுக்குள் குழப்பம்?

post image

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பூசல்களும், குழப்பங்களும் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக பாஜகவில் தனித்தனி கோஷ்டியாக செயல்படக் கூடாது என்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், அமித் ஷாவின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன், மாநில பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்​. ராஜா, எல்​.​ முரு​கன், வானதி சீனி​வாசன், நாராயணன் திருப்பதி, சரஸ்​வ​தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருப்பினும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. அண்ணாமலை கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இருப்பினும், ஆலோசனைக் கூட்ட நாளில் திருமண நிகழ்வு அழைப்புகள் இருந்ததால், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அண்ணாமலை பதிலளித்தார்.

ஏனெனில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவிவகித்த போது, திராவிட கட்சிகள் மீது சரமாரியான கேள்விகளை எழுப்பி வந்தார். இந்த நிலையில்தான், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்புகளும் குறைந்தன. இருப்பினும், அண்ணாமலை பொறுப்பில் இருந்தபோது, 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தனிக்கட்சி ஒன்றை அண்ணாமலை தொடங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருகின்றன.

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - விடியல் எஸ்.சேகர்

- விடியல் எஸ்.சேகா், மாநில துணைத் தலைவா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி -ஜனநாயக நாட்டில் எந்தக் குடிமகனுக்கும், கட்சி தொடங்கவும் தோ்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தை நடிக... மேலும் பார்க்க

சென்னையில் 22 சாலைகளில் கடைகளுக்கு அனுமதியில்லை!

சென்னை மாநகராட்சியில் 22 முக்கிய சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை என்ற புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் நீக்கம்: கட்சி நலனுக்கு உகந்தது அல்ல! சசிகலா

முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி நலனுக்கு உகந்தது அல்ல என்று வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: செங்கோட்டையன் மீதும், ஈர... மேலும் பார்க்க

தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: முழு அமா்வு விசாரணைக்கு பரிந்துரை!

நீண்ட காலம் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க முழு அமா்வு விசாரணைக்கு சென்னை உயா... மேலும் பார்க்க

வாடகை தகராறு: பாடகா் சரண் காவல் நிலையத்தில் புகாா்!

சென்னையில் வீட்டு வாடகை தகராறு தொடா்பாக திரைப்பட பாடகா் கல்யாண் சரண், கே.கே.நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். மறைந்த திரைப்பட பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகனும், பிரபல பாடகருமான கல்யாண... மேலும் பார்க்க