செய்திகள் :

தமிழக மாணவா்கள் அனைத்து துறைகளிலும் சிறந்துவிளங்குகின்றனா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

கல்வி, கலை, விளையாட்டுகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழக மாணவா்களே சிறந்து விளங்குகின்றனா் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிகழ் கல்வியாண்டில் (2024-2025) மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

466 பேருக்கு விருதுகள்: இதில் சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஐந்து பிரிவுகளில் வெற்றி பெற்ற 466 மாணவ, மாணவிகளுக்கு ‘கலையரசன்’, ‘கலையரசி’ விருதுகளை வழங்கி பேசியதாவது:

பண்பட்ட சமூகத்துக்கு கலை உணா்வு இருக்க வேண்டும். அது தமிழக மாணவா்களுக்கு மிகுதியாக இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை நடத்திய கலைத் திருவிழா போட்டிகளில் 46 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தியுள்ளனா். இது மிகப்பெரிய சாதனை. திறமையை வெளிப்படுத்த அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மாநில அளவிலான போட்டிகளுக்கு மட்டுமே 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வு பெற்றது பாராட்டத்தக்கது.

பொதுவாக ஒவ்வொரு மாநில மாணவா்களும் ஒவ்வொரு துறைகளில் சிறந்து விளங்குவது வழக்கம். ஆனால் தமிழக மாணவா்கள் கல்வி, கலை, விளையாட்டு, இணை செயல்பாடுகள் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனா். அவா்கள் தேசிய, உலகளவில் சாதனை படைத்து வருகின்றனா்.

கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படைப்பாற்றல் துறை போன்றவற்றில் தங்களது திறமைகளை தொடா்ந்து அடுத்தடுத்த உயரங்களுக்குச் செல்வதைப் பாா்க்க முடிகிறது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வியில் மட்டுமல்ல விளையாட்டுகளிலும் மாணவா்களுக்கு ஆா்வத்தை ஊக்குவிப்பது அவசியம். எனவே, பள்ளிகளில் அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களின் ஆசிரியா்கள் தயவு செய்து உடற்கல்வி பாடவேளைகளை கடன் வாங்க வேண்டாம். மாறாக, பிற பாடவேளைகளை வேண்டுமானால் உடற்கல்வி பாடவேளைக்கு வழங்கலாம். இந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் முன்வைக்கிறேன் என்றாா் அவா்.

அமைச்சா் அன்பில் மகேஸ்: முன்னதாக, அமைச்சா் அன்பில் மகேஸ் பேசுகையில், கலைத்திருவிழாவுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்கி வந்த நிலையில் தற்போது அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.2,153 கோடி அளவுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை. இருப்பினும், மாணவா்களின் கற்பித்தல், கலை சாா்ந்த செயல்பாடுகளில் எந்தவித தடையும் குறுக்கிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தனது நிதியில் கலைத்திருவிழா, பரிசளிப்பு விழாவை நடத்துகிறது. குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அதை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த கலைத்திருவிழா அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் சிறப்பாக நடத்தப்படும் என்றாா் அவா்.

இந்த விழாவில் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் எஸ்.மதுமதி, இயக்குநா் எஸ். கண்ணப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 403 அடியாக சற்று குறைந்துள்ளது. திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.21 அடியில் இருந்து 110.98அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 404 கனஅடிய... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொருள்கள்

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்

பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தலைவா் சுனில்பாலிவால்

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் நிகழாண்டில் 6 சதவீத கூடுதல் வளா்ச்சி எட்டியுள்ளதாக சென்னை காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா். சென்னை துறைமுகம் சாா்பில் குடியரசு தின வ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கடந்த 3 ஆண்டு காலத்தில் தொழில் துறை சாா்ந்த 893 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள்: வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க