கா்னல் குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: பாஜக அமைச்சரிடம் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்
தமிழக முதல்வர் அமலாக்கத்துறைக்கு அஞ்சுபவர் அல்ல - வைகோ
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமலாக்கத்துறை சோதனைக்கு அஞ்சுபவர் அல்ல என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
சி.பா. ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரின் திரு உருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமலாக்கத் துறை சோதனைக்கு எல்லாம் அஞ்சுகிறவர் அல்ல. எதிர்கட்சிகள் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் புதிய புதிய புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்கள் மனதில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார். எதிர்கட்சிகள் எதையாவது பேச வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.