செய்திகள் :

தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான்: அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்

post image

திருநெல்வேலி: தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான் என திட்டவட்டமாகத் தெரிவித்த தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, "விவசாயத்தில் ஒரு பயிரை வேரோடு பிடுங்கி நட்டால், அது முன்பை விட பெரிதாகத்தான் வளரும். கடந்த 15 ஆண்டுகளாக எங்களை வேரோடு பிடுங்க முயற்சி செய்து பாஜக தோற்றுப்போயுள்ளது. இனியும் அதுதான் நடக்கும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச் சாவடி முகவா்களுக்கான மாநாட்டில் "தமிழகத்தில் திமுக அரசை வேரோடு பிடுங்கி எறிவோம்" என்று அமித் ஷா பேசியதற்கு பதிலளித்து, அமைச்சர் கே.என். நேரு திருநெல்வேலியில் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

பாஜகவின் ஆசை

நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக நியமித்து ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அந்தக் கூட்டத்தில், 'திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம்' என்று பேசியிருக்கிறார்கள். அது அவர்களுடைய ஆசை. அந்த ஆசையை அவர்கள் சொல்லி வருகிறார்கள். விவசாயத்தில், வேரோடு பிடுங்கி நடவு செய்தால் அந்தப் பயிர் இன்னும் பெரியதாக, செழிப்பாக வளரும். அதுபோல, அவர்கள் பிடுங்க நினைத்தால் எங்கள் ஆட்சி இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த வேரோடு பிடுங்கும் வேலையைத்தான் பாஜக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களால் தமிழகத்தில் எதையும் பிடுங்க முடியவில்லை. திமுக கூட்டணிதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வருங்காலத்திலும் திமுகதான் மாபெரும் வெற்றி பெறும்.

கூட்டணியில் குழப்பம்

அதிமுக-பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு கடந்த காலங்களில் மூன்று முறை வந்த அமித் ஷா, ஒவ்வொரு முறையும் 'கூட்டணி ஆட்சி' என்றே பேசி வருகிறார். ஆனால், அது குறித்து அவரும் விளக்கம் சொல்லவில்லை, அமித் ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

உண்மையில், அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், பாஜகவினரும் அதிமுகவுடனான கூட்டணியை விரும்பவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையை வைத்துக்கொண்டு, 'நாங்கள் வெற்றிப் பெற்றுவிடுவோம், ஆட்சியைப் பிடித்துவிடுவோம்' என்று அவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது.

மீண்டும் ஸ்டாலின்தான் முதல்வர்

முதல்வரை யார் எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும், மீண்டும் ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல்வராக வருவார். பொதுமக்கள், குறிப்பாக மகளிர் மத்தியில் முதல்வருக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நடைபெறவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் திமுக ஆட்சி அமையும். மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார்.

தோற்றுப் போய்விடுவோம் என்ற பயத்தில்தான், பிகார், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பாஜகவினர் பல்வேறு பிரச்னைகளைச் செய்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுகவிற்கு போட்டியே கிடையாது. எதிரணியில் யார் நின்றாலும், நாங்கள் தான் மகத்தான வெற்றி பெறுவோம் என்று நேரு கூறினார்.

நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படும் மத்திய அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

Stalin will be the Chief Minister of Tamil Nadu again says Minister K.N. Nehru...

மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் முயற்சியால்தான் ஒன்றுபட்ட நாடு வலிமை பெரும். பலவீனமான மாநிலங்களால் நாட்டை உயர்த்த முடியாது. நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது அக்கறைக் கொண்ட அனைவரும் மாநில சுயாட்சிக்... மேலும் பார்க்க

இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பில் சேருவது எப்படி?

10+2, டிப்ளமோ, இன்ஜினியரிங் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சைபர் பாதுகாப்புத் துறையில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவதற்கு ஒரு அருமையான வாய்ப்பாக, இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பு... மேலும் பார்க்க

சுதாகர் ரெட்டி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் வெளிய... மேலும் பார்க்க

மோடி அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39% பேர் மீது 130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா?

மோடியின் அமைச்சரவையில்39சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம்130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா? என கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி. ஆ.ராசா, அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எ... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கி பலி

அவிநாசி: அவிநாசி அருகே மது போதையில் இளைஞர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவரை காப்பாற்ற சென்ற இளைஞரும் கிணற்று நீரிழ் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?

சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.75,520-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதும், அதனைத் தொடர்ந்து சில நாள... மேலும் பார்க்க