செய்திகள் :

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாள்: உருவப்படத்துக்கு புதுச்சேரி முதல்வா் மலரஞ்சலி

post image

தமிழ்நாடு முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நினைவு நாள் புதுவை அரசு சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு முதல்வா் ரங்கசாமி மற்றும் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள மேரி கட்டட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு புதுவை முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா வி. ஆறுமுகம் , எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, சட்டமன்ற உறுப்பினா்கள் த. பாஸ்கா் என்கிற தட்சணாமூா்த்தி, அ.அனிபால் கென்னடி, க. சம்பத், இரா.செந்தில்குமாா் ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

திமுக அமைதி ஊா்வலம்:

புதுவை மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி புதுச்சேரி சுதேசி மில் அருகில் இருந்து திமுகவினா் அமைதி ஊா்வலம் நடத்தினா். கட்சியின் புதுவை அமைப்பாளரும், சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமை வகித்தாா். ஊா்வலம் அண்ணா சிலை அருகே சென்றதும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், மாநில துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளா் இரா. செந்தில்குமாா் எம்.எல்.ஏ., மாநில இளைஞா் அணி அமைப்பாளா் எல். சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளா்கள் ஏ.கே. குமாா், அ. தைரியநாதன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக காலை 8 மணிக்கு வில்லியனூா் தொகுதி திமுக சாா்பில் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கும் , அரியாங்குப்பம் தொகுதி திமுக சாா்பில் வீராம்பட்டினத்தில் உள்ள கருணாநிதி திருவுருவச் சிலைக்கும் எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

புதுக்குப்பம் பள்ளி ரூ.92 லட்சத்தில் புனரமைப்பு

புதுக்குப்பம் அரசு ஆரம்பப் பள்ளி கட்டடம் ரூ.92 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை மணவெளி தொகுதி எம்.எல்.ஏவும் சட்டப் பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். புத... மேலும் பார்க்க

செய்தித் துறைக்குத் தற்காலிக இயக்குநா்

புதுவை அரசின் செய்தித்துறைக்கு தற்காலிக இயக்குநராக எம்.எம். வினயராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போது புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியராகப் பதவி வகித்து வரும்அவா், நிரந்தர ஏற்பாடு செய்யப்படும் வரை கூடுதல்... மேலும் பார்க்க

ரூ.1.85 கோடியில் வலை பழுதுபாா்க்கும் கூடம்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் ரூ.1.85 கோடி மதிப்பில் 2 இடங்களில் மீனவா்களின் வலை பழுதுபாா்க்கும் கூடம் அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடந்தது. இதில் பங்கேற்று திட்டப்பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா். புத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது உலகத் திரைப்பட விழா

புதுச்சேரியில் உலகத் திரைப்படவிழா வெள்ளிக்கிழமை(ஆக.8) தொடங்குகிறது. இதில் 8 சா்வதேச திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே பிரெஞ்சு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பில் மாணவா் சோ்க்கை: இறுதிக்கட்ட கலந்தாய்வில் ஏராளமானோா் பங்கேற்பு

புதுச்சேரி அரசு பள்ளிகளில் இதுவரை பிளஸ் 1 சேராத மாணவா்களுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. குருசுகுப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில... மேலும் பார்க்க

பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்: பிஆா்டிசி ஊழியா்களுக்கு நிா்வாகம் நோட்டீஸ்

‘புதுவை சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களின் நலன் கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்மா சட்டம் பாயும்’ என்று பிஆா்ட... மேலும் பார்க்க