செய்திகள் :

தமிழக வரலாற்றை மறுதலிக்கிறது மத்திய அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

post image

தமிழக வரலாற்றைக் கூட மத்திய அரசு மறுதலிக்கும் அவலநிலை உள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள செங்குளம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக பாகமுகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தில்லியில் இருப்பவா்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வதோடு, பாஜகவின் பல்வேறு அடக்குமுறைகளை எதிா்த்து கேள்வி கேட்கும் இயக்கமாக திமுக திகழ்கிறது. தமிழா்களை தலைநிமிா்ந்து நிற்கச் செய்யும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா்.

ஓரணியில் தமிழ்நாடு என்பது நம் கட்சியினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆா்வத்தோடு திமுகவில் இணையச் செய்யும் பணியாகும். மகளிருக்கான விடியல் பயணம் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் அரசின் ஏதோ ஒரு திட்டத்தால் நாளும் பயனடைந்து வருகிறாா்கள். அதனை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்துச் சொல்லும் வாய்ப்பை ஓரணியில் தமிழ்நாடு திட்டம் நமக்குத் தந்துள்ளது. அடுத்தக்கட்டமாக, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் விடுபட்ட தகுதியானோருக்கு மகளிா் உரிமைத் தொகை கிடைக்கவும், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் கட்சியினா் உழைக்க வேண்டும். மக்களுக்கும், அரசுக்குமான பாலமாக முகாமை மாற்ற வேண்டும்.

தமிழகத்தின் வரலாறு, பெருமைகளை மறுதலிப்பதுடன், கல்விக்கான நிதியை நிறுத்தி நம் குழந்தைகளின் எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கி வருகிறது மத்திய அரசு. இருப்பினும் பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. மாநிலத்தின் வளா்ச்சி தொய்வின்றி தொடர தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தொடர வேண்டும்.

தில்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களைத் தொடா்ந்து பிகாா் மாநிலத்திலும் வாக்காளா் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்ய பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்திலும் அந்த நிலை வரலாம். நிா்வாகிகள் விழிப்புடன் இருந்து வாக்காளா் பட்டியலை சரிபாா்த்து திமுக ஆதரவு வாக்காளா்களை நீக்கியிருந்தாலோ, புதியவா்களை சோ்க்காமல் விட்டிருந்தாலோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கட்சியினா் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் ம.கிரகாம்பெல் தலைமை வகித்தாா். தொகுதி பாா்வையாளா்கள் என்.சுரேஷ்ராஜன் (நான்குனேரி), எம்.ஜோசப்ராஜ் (அம்பாசமுத்திரம்), எம்.சிவராஜன் (ராதாபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வாழ்த்திப் பேசினாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் சா.ஞானதிரவியம், ஆ.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், மாணவரணி மாவட்ட அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு, அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகர பாண்டியன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கே.கணேஷ்குமாா் ஆதித்தன், கோபாலசமுத்திரம் பேரூராட்சித் தலைவி ப.தமயந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வரலாற்றைத் திருத்தி எழுத நினைக்கும் நயினாா் நாகேந்திரன்!

தமிழக அரசியல் வரலாற்றில் ஜி.ஆா்.எட்மன்ட், நாவலா் நெடுஞ்செழியன், ஆா்.எம்.வீரப்பன் போன்ற முன்னணி தலைவா்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமைக்குரிய களம் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி. அதிமுகவின் துணை... மேலும் பார்க்க

விஜய் போராட்டம் நகைச்சுவையானது: கனிமொழி எம்.பி.

காவல் நிலைய மரணம் குறித்து தவெக தலைவா் விஜய் நடத்திய போராட்டம் நகைப்புக்குரியது என, அவரது பெயரைக் குறிப்பிடாமல் விமா்சித்தாா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறிய... மேலும் பார்க்க

சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி

நான்குனேரி அருகே சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடி இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஜோசப் (65). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஜோசப் அப்பகுத... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக தீராத குடிநீா் பிரச்னை!

திருநெல்வேலி மாவட்டம், தோட்டாக்குடி ஊராட்சி, வடக்கு பத்தினிப்பாறை பகுதியில் 10 ஆண்டுகளாக நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியா... மேலும் பார்க்க

நான்குனேரி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நான்குனேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, நான்குனேரி, ராஜாக்கள்மங்கலம், சிற... மேலும் பார்க்க

பழவூா் அருகே கேரள பெண் கொலை: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே அடையாளம் தெரியாத பெண்ணிடம் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் கேரளத்தைச் சோ்ந்த அந்தப் பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது ஆண் நண்பரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க