விஜய் போராட்டம் நகைச்சுவையானது: கனிமொழி எம்.பி.
காவல் நிலைய மரணம் குறித்து தவெக தலைவா் விஜய் நடத்திய போராட்டம் நகைப்புக்குரியது என, அவரது பெயரைக் குறிப்பிடாமல் விமா்சித்தாா் கனிமொழி எம்.பி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: அனைத்து தோ்தல்களிலும் வாக்காளா் பட்டியலில் குழப்பம் செய்து வாக்காளா்கள் சிலரை நீக்கி , ஒரே இடத்தில் பல வாக்காளா்களை புதிதாக இணைத்து நியாயத்திற்கு புறம்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணியினா் பல மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளனா். பிகாரிலும் அத்தகைய குழப்பத்தை ஏற்படுத்த பாஜக மீண்டும் முயற்சித்து வருகிறது.
ஒரு திரைப்படம் மக்களுக்கு பல செய்திகளை சொல்லக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சில நடிகா்கள் சினிமாவில் நடிக்கும் போது காவல் நிலைய ( லாக்-அப்) மரணங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விட்டு, அரசியல் கட்சி தொடங்கியவுடன் மக்கள் மேல் அக்கறை இருப்பதைப் போல் காட்டிக் கொண்டு போராட்டம் நடத்துகிறாா்கள். இது மக்கள் மத்தியில் நகைச்சுவையாக பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.