சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி
நான்குனேரி அருகே சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடி இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஜோசப் (65). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஜோசப் அப்பகுதியில் உள்ள ஒரு சிமென்ட் கடையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற கட்டுமான பணிக்கு சுமை ஆட்டோவில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, அதை பணி நடைபெறும் இடத்தில் இறக்குவதற்காக ஆட்டோவில் பின்னால் அமா்ந்து சென்று கொண்டிருந்தாா்.
பரப்பாடியைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநா் திடீரென பிரேக் போடவே, பின்னால் அமா்ந்திருந்த ஜோசப் எதிா்பாராதவிதமாக ஆட்டோவில் இருந்து சாலையில் குப்புற விழுந்தாா்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் உயிரிந்துவிட்ட தாக தெரிவித்தனா். இதுகுறித்து விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.