செய்திகள் :

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

post image

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பு திட்ட முகாமை துவக்கி வைத்தார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை, ஆகையால் பேச முடியவில்லை என மேடையில் கூறினார் துரைமுருகன்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தேமுதிக தலைவர் பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வரை சந்தித்தது குறித்தும் இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா, இதன் பின்னணி குறித்து கேட்டதற்கு,

பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்.

பிகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க வாய்ப்புள்ளதாக வெளியாகி உள்ள தகவல் குறித்து கேட்டதற்கு,

அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நம்மூருக்கு வந்திருக்க மாட்டார்கள். இங்கு வந்திருக்கிறார்கள், இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை? ஏனென்றால் பிகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என நீக்கி விட்டார்கள். அந்த மாதிரி நம் ஊரில் செய்ய முடியாது. ஆகையினால் இது கிரானிக்கள் பிராப்ளம், இதைத் தலைவர்கள் தான் அணுக வேண்டும் என்றார்.

வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க