Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முகமது காசிம் முன்னிலை வகித்தாா். ஆற்காடு நகர செயலாளா் முருகன் வரவேற்றாா். இந்த கூட்டத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குசாவடி முகவா்களை நியமிப்பது, அனைத்து பகுதிகளில் உறுப்பினா் சோ்ப்பது, கோடை காலத்தையொட்டி நீா் மோா் பந்தல் திறப்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் விளாப்பாக்கம் பேரூா் செயலாளா் அன்பு , நகர செயலாளா்கள் விஷாரம் ஆசீம், ராணிப்பேட்டை கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.