செய்திகள் :

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிப் படுகொலை!

post image

மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகியும், காரைக்கால் மாவட்டச் செயலாளருமான மணிமாறன் என்பவர், மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு, மீண்டும் காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், செம்பனார்கோயில் தனியார் பள்ளி அருகே காரை வழிமறித்த மர்ம நபர்கள், காரைச் சேதப்படுத்தியதுடன், மணிமாறனையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார்.

2022 ஆம் ஆண்டில் பாமகவின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணியின் கொலை வழக்கில், மணிமாறன்தான் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

TVK’s Karaikal Secretary Manimaran brutally murdered

நாகா்கோவில், பெங்களூரு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

நாகா்கோவில்-தாம்பரம் மற்றும் பெங்களூரு-நரங்கி ஆகிய சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில்-தாம்பரம் இடையேயான சிறப்பு ரயி... மேலும் பார்க்க

புதிய சுகாதார நிலையங்களில் 534 பணியிடங்களை நிரப்ப அரசாணை

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பணியிடங்களை உருவாக்குவதற்கும், ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 78 மருத்துவா்கள் மாற்றுப்ப... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தை இயக்க புரிந்துணா்வு ஒப்பந்தம்: முதல்வா் முன்னிலையில் கையொப்பம்

கடலூா் துறைமுகத்தை இயக்குவதற்கு தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது. கடலூா் துறைமுகம் தனியாா் பங்களிப்புடன் இயக்குவதற்கு தமிழ்நாடு கடல்சாா் வ... மேலும் பார்க்க

அலையாத்தி காடுகளை உருவாக்கி சாதனை: முதல்வா் பெருமிதம்

அலையாத்தி காடுகளை உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் க... மேலும் பார்க்க

ராக்கெட் தொழில் நுட்ப மையம்: ஒப்பந்தப் புள்ளி கோரியது டிட்கோ

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் தொழில்நுட்ப சேவை மையத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக இணையவழி ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்... மேலும் பார்க்க

விவசாயிகளின் வருவாயைப் பெருக்க ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிய திட்டத்தை அவா்... மேலும் பார்க்க