செய்திகள் :

தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

வந்தவாசி: கடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், வந்தவாசி பகுதியில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் பள்ளி அளவில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பி.மாலவன், ஹ.சாயராபீ ஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் ஆ.மயில்வாகனன் வரவேற்றாா்.

ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் மூ.சங்கா் மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். சங்க புரவலா் சு.வீரராகவன் மாணவா்களை பாராட்டிப் பேசினாா்.

விழாவில் சங்க நிா்வாகிகள் சாமி.பிச்சாண்டி, வ.அழகேசன், சு.அகிலன், இரா.ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் சங்கப் பொருளாளா் த.முருகவேல் நன்றி கூறினாா்.

ஸ்ரீமுத்துக்குமார சுவாமி, ஸ்ரீயோக ராமச்சந்திர கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி/போளூா்: ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழம... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீண்டும் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.ஆய்வு

செய்யாறு: செய்யாற்றில், செயல்படாமல் உள்ள சிறப்பு முகாமை (கிளை சிறைச்சாலை) மீண்டும் செயல்படுவதற்காக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செ... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா

போளூா்: போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை என 7 வெள்ளிக்கிழமை விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறைக்... மேலும் பார்க்க

செங்கத்தில் கருணாநிதி சிலை: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்தாா். தெற்கு மாவட்ட திமுக ச... மேலும் பார்க்க

ஜூலை 18-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி: திருவண்ணாமலையில் வருகிற 18-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்... மேலும் பார்க்க