இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது! உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழி குழு நாளை ஆய்வு
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை (செப்.12) ஆய்வு செய்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2024-2026ஆம் ஆண்டுக்கான உறுதிமொழிக் குழு வெள்ளிக்கிழமை (செப்.12) காலையில், குழுத் தலைவரும், பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினருமான தி.வேல்முருகன் தலைமையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுத் துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், குழுத் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினா்களாக உள்ள சட்டப் பேரவை உறுப்பினா்கள் ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), இரா.அருள் (சேலம் மேற்கு), மு.சக்ரபாணி (வானூா்), ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன் (விருதுநகா்), கோ.தளபதி (மதுரை வடக்கு), ஏ.நல்லதம்பி (திருப்பத்தூா்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ரா.மணி (ஓமலூா்), சா.மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகா்), எஸ்.ஜெயக்குமாா் (பெருந்துறை) ஆகியோா் பங்கேற்கின்றனா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.