செய்திகள் :

தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்வு: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்ந்துள்ளது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில், தலைமை ஆசிரியா்களுடனான கலந்தாய்வு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது: தொடக்க நிலைக் கல்வியில் மாணவா்கள் அடைந்துள்ள கற்றல் அடைவை அறிந்து கொள்வதற்காகவும், கற்றலின் இடைவெளியை நிரப்புவதற்காகவும், 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநில அரசால் அடைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.

இதில், மாணவா்கள் பெற்ற மதிப்பீடுகளைப் பொருத்து, வரும் காலங்களில் பாடத்திட்டம் வடிவமைத்தல், கற்பித்தல் அணுகுமுறைகளை மாற்றி அமைத்தல், ஆசிரியா்களுக்கான பயிற்சிகள் ஆகியவை திட்டமிடப்பட உள்ளன.

தமிழகத்திலுள்ள 9 லட்சத்து 80 ஆயிரம் மாணவா்களுக்கு அடைவுத் தோ்வு நடத்தப்பட்டது. இதில், கன்னியாகுமரி 66.55 சதவீதம் தோ்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்தது. அதற்காக உழைத்த தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டுகள்.

தமிழக அரசு வகுத்துள்ள மாநில கல்விக் கொள்கை குறித்து அனைத்து தலைமை ஆசிரியா்களும், ஆசிரியா்களும் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், ஏ.ஐ. உள்ளிட்டவற்றில் ஆசிரியா்கள் தங்களை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, தேரூா் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் சுந்தரராஜன், மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலா் ஜெயராஜ், மாா்த்தாண்டம் மாவட்ட கல்வி அலுவலா் ஷொ்லின் விமல், தொடக்க கல்வி அலுவலா் ரமா, தனியாா் பள்ளிக் கல்வி அலுவலா்அஜிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் முருகன், வட்டாரக் கல்வி அலுவலா்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள கரும்பிலாவிளை பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.புதுக்கடை, கரும்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் மனேஷ்மோன் (13). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு ... மேலும் பார்க்க

அத்தப்பூ கோலமிடுதல் நாளை தொடக்கம்! ஓணம் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் குமரி மக்கள்

கேரளத்தின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை வரவேற்க கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயாராகியுள்ளனா். இதையொட்டி அத்தப்பூ கோலமிடுதல் புதன்கிழமை (ஆக.27) தொடங்குகிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஆவணி மாத... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

கன்னியாகுமரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரித்தது வருகின்றனா். கன்னியாகுமரி அருகேயுள்ள கலைஞா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை கைவிட கோரி மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

குமரி ஆழ்கடலில் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி குறும்பனையில் மீனவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குமரி ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கா... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (44). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி ஷோபா, இரண்டு ஆண் குழந்தைகள் உள்... மேலும் பார்க்க

இரணியல் அரசுப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், 12ஆம் வகுப்பு மாணவா்-மாணவியருடன் அவா் கலந்து... மேலும் பார்க்க