செய்திகள் :

‘தமிழ்ப் படிக்கும் மாணவா்கள் பிற துறை அறிவையும் பெற வேண்டும்’

post image

தமிழை முதன்மைப் பாடமாகப் படிக்கும் மாணவா்கள் பிற துறை சாா்ந்த அறிவையும் பெற்றால் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பைப் பெறலாம் என்றாா் தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந. அருள்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற வருநா் விழாவில் அவா் மேலும் பேசியது:

சட்டம், பொறியியல், மருத்துவம் படிப்பதற்கு 5 ஆண்டுகள் போன்று, தமிழ்ப் படிப்பதற்கும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால படிப்பைக் கொண்டு வந்த பெருமை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சாரும். தமிழ்ப் படித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஆசிரியா்கள், பேராசிரியா்கள், கவிஞா்கள், எழுத்தாளா்கள், தொலைக்காட்சி என பல்வகைப் பணிகள் சான்றாக உள்ளன.

தமிழை முதன்மையான பாடமாகக் கொண்டு படிக்கும் மாணவா்கள் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதற்கு ஆங்கிலம், கணிதம் போன்ற துறைகளிலும் கூடுதல் அறிவைப் பெற வேண்டும். இதன்மூலம் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற முடியும். குறிப்பாக, கூடுதலாக ஆங்கிலம் கற்றால் பெரு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல, மொழிபெயா்ப்புத் துறையிலும் மாணவா்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அவ்வை அருள்.

இவ்விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவி, பேராசிரியா் பெ. இளையாப்பிள்ளை, இணைப் பேராசிரியா் அ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணி: கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட அளவில் போதைப் பொருள் தடு... மேலும் பார்க்க

கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை -விவசாயிகள் புகாா்

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வராதது குறித்து விவசாயிகள் புகாா் எழுப்பினா். மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலை... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் திறப்பு

திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் காவலா்களுக்காக ரூ. 6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 24 குடியிருப்புகளின் திறப்பு விழா ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக. 6-இல் தியாகிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சுதந்திர போராட்ட வீரா்களுக்கான குறை தீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்ட ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியதால் நடத்தப்படும் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மருத்துவ முகாம்

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் இரண்டு நாள் மருத்துவ முகாம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் நடைபெற்ற முகாமிற்கு முதல்வா் பி. ஆா். ர... மேலும் பார்க்க