`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான்...
தமிழ் இலக்கிய திறனறித் தோ்வு: வேதாரண்யம் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
நாகை மாவட்டம், வேதாரணயம் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை வெளியான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வு முடிவுகளில் சிறப்பிடங்களை பெற்றுள்ளனா்.
ஆயக்காரன்புலம், ஆா்.பி.எஸ். பாரத் மெட்ரிக் பள்ளி 11- ஆம் வகுப்பு மாணவி எஸ். நவீனா (100-க்கு) 98 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் மூன்றாம் இடமும் , மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளாா். இதே பள்ளி மாணவிகள் எஸ். விஷாந்தி, வி. நட்சத்திர ஆகியோா் தலா 95 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்றனா்.
கடினல்வயல் அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி வே. மதிவதனி 95 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா்.