ADMK: `அதிமுக பலவீனமா இருக்கு, அதை சரிசெய்யத்தான் நான் இருக்கேன்' - சசிகலா பேசிய...
தமிழ் சினிமாவுக்கு நிறைய சசிகுமார்கள் தேவை: முத்தையா
நடிகர் சசிகுமார் குறித்து இயக்குநர் முத்தையா நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் கிராம வாழ்க்கையைத் திரைப்படுத்தி கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான முத்தையா குட்டிப்புலி மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். அப்படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாகவும் லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்திருந்தனர்.
2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய முத்தையா, “என்னை இயக்குநரென முதலில் நம்பியவர் சசிகுமார். குட்டிப்புலி கதையை நடித்துக்காட்டியபடியே சொன்னேன். சிலருக்கு நம்பிக்கையில்லை என்றாலும், ‘சினிமா என்பது நடிப்புதான். முத்தையாவுக்கு அதைச் சொல்ல வருகிறது’ என சசிகுமார் சொன்னார். என் அப்பா, அம்மாவுக்குப் பின் என்னை முழுமையாக நம்பியது அவர்தான்.
மேலும், என்னிடம் பேசும்போது சினிமாவில் நான் தனிப்பட்ட சாதனை என நினைப்பது 10 இயக்குநர்களையாவது என் மூலம் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்றார். இதுவரை 11 பேரை தன் நடிப்பில் இயக்குநராக அறிமுகப்படுத்திவிட்டார். தமிழ் சினிமாவுக்கு நிறைய சசிகுமார்கள் தேவை.” என்றார்.
குட்டிப்புலி திரைப்படத்திற்குப் பின் சசிகுமாருடன் இணைந்து கொடிவீரன் படத்தை முத்தையா இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்!